கச்சதீவு அந்தோனியார் திருவிழா தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தின் அறிவிப்பு

Jaffna Sri Lanka Navy Kachchatheevu
By Kajinthan Feb 26, 2026 11:36 AM GMT
Report

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவானது நாளையும் (27) நாளை மறுதினமும் (28) நடைபெறவுள்ள நிலையில் திருவிழா தொடர்பாக யாழ். மாவட்ட செயலகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இரகசிய அறிக்கையில் சிக்கிய சுரேஷ் சலே! மின்னஞ்சல் மற்றும் வங்கி கணக்குகளை தீவிரமாக ஆராயும் சி.ஐ.டி

இரகசிய அறிக்கையில் சிக்கிய சுரேஷ் சலே! மின்னஞ்சல் மற்றும் வங்கி கணக்குகளை தீவிரமாக ஆராயும் சி.ஐ.டி

பக்தர்களுக்கான அறிவுறுத்தல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவானது யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம் யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் நெடுந்தீவு, பிரதேச சபை நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் 2026.02.27 மற்றும் 2026.02.28 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் திருவிழா தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தின் அறிவிப்பு | Katchatheevu St Antony Church Festival

2026.02.27 ஆந் திகதி காலை 4.00 மணி தொடக்கம் பி.ப 01.00 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும்.

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27.02.2026ம் திகதி காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும்.

கச்சதீவிற்கு குழுவாக / தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கான அறிவுறுத்தல்

வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன், 2026.02.27 ஆந் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கச்சதீவு அந்தோனியார் திருவிழா தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தின் அறிவிப்பு | Katchatheevu St Antony Church Festival

கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026ம் திகதி அன்று காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவினை கொண்டுவரமுடியும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சர்வதேச பிடியாணை உத்தரவில் கைதான இலங்கையர்! இந்தியா புறப்பட்ட CID அதிகாரிகள்

சர்வதேச பிடியாணை உத்தரவில் கைதான இலங்கையர்! இந்தியா புறப்பட்ட CID அதிகாரிகள்

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து பெருமளவான யாத்திரிகர்கள்

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து பெருமளவான யாத்திரிகர்கள்


GalleryGallery
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US