கதிர்காம பாத யாத்திரை தொடர்பிலான பிரச்சினை
கதிர்காம பாத யாத்திரையின் போதான வீதி வழி பயணத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணண் சேவா அமைப்பின் தலைவர் குணராஜசிங்கம் செந்தூரன் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (16.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
அவசரமாக சென்று யாத்திரைகளை நிறைவேற்ற முடியாது பக்தர்களின் வருகையை குறைக்கும் செயலாக காணப்படுகிறது. பண்டைய காலம் தொடக்கம் மரபு ரீதியாக இது நடைபெறுகின்றது.
வீதி தடை
நேர்த்தி கடனுக்காக சிறுவர்கள் முதல் பெரியார்கள், கர்ப்பிணி, தாய்மார்கள் என கதிர்காம யாத்திரைகளை சைவப்படி மேற்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை பிற்போட்டிருப்பதும் குறுகிய காலத்தில் செய்வதென்பதும் தடுக்கும் செயலாக காணப்படுகிறது. பெரும்பான்மையினத்தவர்கள், தமிழர்கள் என பலரும் கதிர்காம யாத்திரையினை மேற்கொள்வது வழக்கம்.
ஈழத்து சைவர்களின் வாழ்வியலில் ஒன்றாக காணப்படுகிறது. நடந்து சென்று நேர்த்தி கடன் செய்யும் ஆன்மீகம் தொன்று தொட்டு நடந்து வருகிறது. கடினமான பாதை காடுகள் ஊடாக செல்ல வேண்டும். இந்த மாதம் 30ஆம் திகதி திறக்கப்பட இருந்த நிலையில் நாட்கள் பிற்போடப்பட்டுள்ளன.
இன்னும் நான்கு நாட்களுக்குள் இதனை நிறைவேற்றுவது கடினம். பல்லாயிரக்கணக்கான பாத யாத்திரை குழுக்கள் தங்களது கண்டணத்தை தெரிவித்து வருகிறார்கள். வழமை போன்று இந்த பாதை யாத்திரை நடைபெற முன்வர வேண்டும். எனவே, உரிய அரச தரப்பினர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |