கோட்டாபய தொடர்பில் மீண்டும் பரவும் சர்ச்சைக்குரிய பதிவு: வெளியான காரணம்
கதிர்காமம் மெனிக் கங்கைக்கு அருகில் வேறொருவர் கட்டிய கட்டடம் தனக்குச் சொந்தமானது என்று சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் பதிவில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவித்த அவர்,
கதிர்காம மெனிக் கங்கைக்கு அருகில் வேறொருவர் கட்டிய கட்டடம் எனக்குச் சொந்தமானது என்று அவ்வப்போது ஊடகங்களில் ஒரு செய்தி வெளியிடப்பட்டு வருவதைக் காணலாம்.
திங்கட்கிழமை, அக்டோபர் 13, 2025 (நேற்று), சில தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட செய்தியில் மேற்படி கட்டடத்தை குறிப்பிடும் போது எனது பெயர் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிஐடி விசாரணை
மேற்படி கட்டடத்தின் உரிமை குறித்து கடந்த காலத்தில் சிஐடி விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை தொடர்பாக நானும் ஒரு அறிக்கையை அளித்தேன்.
அது குறித்து என்னிடம் கேட்டதற்கான காரணம், அந்தக் கட்டடத்திற்கு மின்சார இணைப்பைப் பெறுவதற்காக "ஜி. ராஜபக்ச" என்ற நபரின் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் ஆகும்.
இருப்பினும், அந்த விண்ணப்பத்தில் முறையான கையொப்பம் இல்லை. இந்த தவறான செய்தி அவ்வப்போது வெளிவருவதாலும், தகவலுக்காகவும், கதிர்காமம் மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள கட்டடம் எனக்கு சொந்தமானது அல்ல என்பதை நான் உறுதிப்படுத்துகின்றேன்.
கதிர்காமப் பகுதியில் எந்தவொரு கட்டடத்தையும் கட்டுவதிலோ அல்லது பராமரிப்பதிலோ எனக்கு எந்த காரணமும், ஆர்வமும் இருந்ததில்லை என்பதையும் கூற விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



