கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு சென்ற இலங்கையரின் மோசமான செயல்
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நடவடிக்கையின் போது, 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட அதிக நச்சுத்தன்மை கொண்ட கஞ்சா அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
45.400 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா மற்றும் சைலோசைபின் அல்லது மேஜிக் காளான்கள் எனப்படும் 6 கிலோகிராம் காளான்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
500 மில்லியன் இந்திய ரூபாய்
தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கொழும்பிலிருந்து கெம்பேகவுடா விமான நிலையத்தில் 9ஆம் திகதி வந்த இரண்டு நபர்களை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அவர்களின் பொருட்களில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல விவரங்கள் தெரியவந்ததாக கூறப்படுகின்றது.
அதன்படி, இந்தக் கடத்தல் ஒரு இலங்கையரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர் வேறொரு விமானத்தில் வந்தபோது இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



