பொலிஸாருடன் மோதிய பலாங்கொட கஸ்ஸப தேரர்! மருத்துவமனையிலிருந்து வெளியான காணொளி
அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலி மகா சேயவுக்கு அருகில் நேற்று (12) நடைபெற்ற சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டபலாங்கொட கஸ்ஸப தேரர், பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டியும் அச்சுறுத்தியும் இருப்பது போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தக் காணொளியில், மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் தேரரைச் சுற்றி மருத்துவப் பணியாளர்களும் பொலிஸாரும் இருப்பதைக் காண முடிகிறது.
வெளியான காணொளி
அங்குள்ள பொலிஸாரை நோக்கி, கஸ்ஸப தேரர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும், அவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தும் பேசுவது அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட மூன்று பௌத்த பிக்குகள், நேற்று அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்ற இடத்தில், கஸ்ஸப தேரர் மற்றும் அவருடன் இருந்தவர்களுக்கும்,ராஜங்கனயே சத்தாரத்தன தேரர் மற்றும் சில பொதுமக்களை உள்ளடக்கிய மற்றொரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
விளக்கமறியல் உத்தரவு
இதற்கிடையில், அனுராதபுரம் புனித நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் அவருடன் இருந்த ஆறு பேர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தினால் நவம்பர் 26-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புனித இடத்தில் போராட்டத்தைத் தொடர்ந்ததன் மூலம், சந்தேக நபர்கள் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காணொளியை காண இங்கே அழுத்தவும்..
ஜனாதிபதியின் ஐந்து மணிநேர உரை! 220 இலட்சம் மக்கள் எதிர்நோக்கும் பாரிய சிக்கல் தொடர்பில் சஜித் விமர்சனம்
you may like this..