காஷ்மீர் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி.. முக்கிய நாடுகளிடம் பாகிஸ்தான் கோரிக்கை
காஷ்மீர் - பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்தை அடுத்து, இச்சம்பவம் இந்திய - பாகிஸ்தானட மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான்
இதற்கிடையில், இச்சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறியது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவும், சீனாவும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ரஷ்ய ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், "இந்த நெருக்கடியில் ரஷ்யா அல்லது சீனா அல்லது மேற்கத்தேய நாடுகள் கூட மிகவும் நேர்மையான பங்கை வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.
மேலும் அவர்கள் ஒரு புலனாய்வுக் குழுவை அமைக்கலாம். இந்தியா அல்லது மோடி பொய் சொல்கிறாரா என்பதை விசாரிக்கும் இந்த பணியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஒரு சர்வதேச குழு கண்டுபிடிக்கட்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |