7 மணி நேர விசாரணை..! சிபிஐ அலுவலகத்தின் தனியறையிலிருந்து வெளியேறினார் விஜய்

Vijay India Karur
By Dhayani Jan 12, 2026 02:13 PM GMT
Report

புதிய இணைப்பு

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ நடத்திய முதல் நாள் விசாரணை நிறைவுபெற்றுள்ளது.

இதற்கமைய, நாளை(13) காலை மீண்டும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.

சுமார் 7 மணி நேர விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய அவர், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஒன்றரை மணிநேரம் தனியறையில் கையெழுத்திடுவதற்காக வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கையொப்பமிட்டு வெளியேறிய அவர், தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.  

7 மணி நேர விசாரணை..! சிபிஐ அலுவலகத்தின் தனியறையிலிருந்து வெளியேறினார் விஜய் | Karur Crowd Case Vijay Left For Delhi

நான்காம் இணைப்பு

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது சிபிஐ அதிகாரிகள் மூன்று முக்கிய கேள்விகளை விஜய்யிடம் எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கேள்விகள் கடுமையானவை மற்றும் முக்கியமானவை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய கேள்விகள்

முதல் கேள்வி, ‘நீங்கள் ஒரு திறந்த வாகனத்தில் நின்று கொண்டிருந்தீர்கள், கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுவது தெளிவாகத் தெரிந்தும், நீங்கள் உங்கள் பேச்சைத் தொடர்ந்தது ஏன்?’ என கேட்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கேள்வி, ‘சிலர் மயங்கி விழுந்தபோது, நீங்கள் கூட்டத்திற்குத் தண்ணீர் போத்தல்களை விநியோகித்துக் கொண்டிருந்தீர்கள், அப்படியிருந்தும் இந்த விஷயத்தில் ஏன் எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்கவில்லை?’ என கேட்டுள்ளனர்.

மூன்றாவது கேள்வி, ‘நீங்கள் ஏன் சரியான நேரத்தில் கூட்ட இடத்திற்கு வரவில்லை? உங்கள் தாமதம் கூட்டத்தில் அமைதியின்மையையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியது. இது உங்கள் அரசியல் அதிகாரத்தைக் காட்டும் செயலா?’ எனவும் கேட்கப்பட்டுள்ளது.

7 மணி நேர விசாரணை..! சிபிஐ அலுவலகத்தின் தனியறையிலிருந்து வெளியேறினார் விஜய் | Karur Crowd Case Vijay Left For Delhi

7 மணி வரை விசாரணை தொடரலாம்

இதேவேளை, கரூர் பேரணியின் ஏற்பாடுகள், திட்டமிடல், பொலிஸாருடனான ஒப்பந்தங்கள், கூட்டக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், பேரணியின் செலவுகள், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆராய சிபிஐ திட்டமிட்டுள்ளது.

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய்யிடம் இரவு 7 மணி வரை விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

7 மணி நேர விசாரணை..! சிபிஐ அலுவலகத்தின் தனியறையிலிருந்து வெளியேறினார் விஜய் | Karur Crowd Case Vijay Left For Delhi

மூன்றாம் இணைப்பு

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரச சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

100 கேள்விகளை கேட்க சிபிஐ திட்டம்

இதன்போது விஜயிடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வருவதுடன், விஜய்யிடம் 100 கேள்விகளை கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

7 மணி நேர விசாரணை..! சிபிஐ அலுவலகத்தின் தனியறையிலிருந்து வெளியேறினார் விஜய் | Karur Crowd Case Vijay Left For Delhi

இன்று காலை 11.30 மணியளவில் முன்னிலையான விஜய்யிடம் மாலை 5 வரை விசாரணை நடத்தப்பட உள்ளதுடன், விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள், அவர் அளிக்கும் பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து வருகின்றனர். 

விஜய்யிடம் விசாரணை நடைபெறும் அதே நேரத்தில் பிரசாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் 8 பேரிடம், கரூரில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

இரண்டாம் இணைப்பு

கரூர் சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கரூர் பிரசாரத்திற்கு தாமதமாக வருகை தந்தமைக்கான காரணம், அனுமதி வழங்கப்பட்ட நேரம், கரூரில் என்ன நடந்தது என்பன தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

கரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஜனவரி 12) காலை முன்னிலையாகவுள்ளார்.

இதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்ற அவர் அங்கிருந்து 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.

பிரதமர் பதவி தொடர்பில் ஹரிணியின் தீர்மானம்..! ஜேவிபியின் உயர் பீடத்தின் முக்கிய அறிவிப்பு

பிரதமர் பதவி தொடர்பில் ஹரிணியின் தீர்மானம்..! ஜேவிபியின் உயர் பீடத்தின் முக்கிய அறிவிப்பு

டெல்லி பொலிஸார் கூடுதல் பாதுகாப்பு

இவருடன் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

7 மணி நேர விசாரணை..! சிபிஐ அலுவலகத்தின் தனியறையிலிருந்து வெளியேறினார் விஜய் | Karur Crowd Case Vijay Left For Delhi

இதன் காரணமாக விஜய் வருகையை ஒட்டி சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.   

டெல்லி வரும் தவெக தலைவர் விஜய்க்கு போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மூன்று அடுக்கு பாதுகாப்பு

ஏற்கனவே விஜய்க்கு மத்திய அரசின் ”ஒய்” பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதனுடன் டெல்லி பொலிஸார் கூடுதல் பாதுகாப்பை வழங்கவுள்ளனர்.

7 மணி நேர விசாரணை..! சிபிஐ அலுவலகத்தின் தனியறையிலிருந்து வெளியேறினார் விஜய் | Karur Crowd Case Vijay Left For Delhi 

இதனை தவிர விஜய்யின் தனி பாதுகாவலரும் இருப்பதால் மூன்று அடுக்கு பாதுகாப்பும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் இடத்தில் இருந்தே விஜய்க்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்க தொடங்கியுள்ளதுடன், இவர் செல்லும் காருக்கு முன்பும், பின்பும் டெல்லி பொலிஸாரின் வாகனங்கள் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது

நாட்டில் அதிகரித்துள்ள வைரஸ் தொற்று

நாட்டில் அதிகரித்துள்ள வைரஸ் தொற்று

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US