கருணா விரும்பினாலும் எமக்கு சாத்தியம் இல்லை! சி.வி.கே. சிவஞானம் பதிலடி
கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
இன்று யாழில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்றைய தினம் கிளிநொச்சியில் விநாயகமூர்த்தி முரளிதரன் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சிவஞானம், கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் எனவும் தெரிவித்திருந்தார்.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri