புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி தொடர்பில் கருணா வெளியிட்ட தகவல்
இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால கொடூர யுத்தத்தை ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமையவே முடிவுக்கு கொண்டுவர முடிந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனை கூறியுள்ளார்.
“ இதுவரை வெளிவராத இரகசியத்தை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவே இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
ராஜபக்கர்களுக்கு ஆதரவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கிடைத்த அழைப்பின் பிரகாரம், குறிப்பிடத்தக்க வெற்றிக்காக தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளளேன்.

ராஜபக்சவால் அழிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பங்களித்தவர் ரணில் விக்ரமசிங்க.
மேலும், ராஜபக்கர்களுக்கு ஆதரவு அளித்து ஜனாதிபதி பதவியில் அவர்களை அமர்த்த நான் தயாரில்லை.

30 வருடகால கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்து கோரிக்கையை தொடர்ந்தே யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது” என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri