ஹன்வெல்ல மாணவி மீதான தவறான நடத்தை : 8 இளைஞர்கள் தடுத்து வைத்து விசாரணை
கொழும்பின் புறநகர் பகுதியின் ஹன்வெல்ல (Hanwella) பிரதேசத்தில் 16 வயது மாணவியை கூட்டாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 8 இளைஞர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பர் எனத் தெரிவிக்கப்படும் ஒருவர் உட்பட 8 இளைஞர்களையே 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு பதில் நீதவான் பிரியங்க மத்தும படபண்டி (Priyanka Madduma Patabandi ) உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் அதிகாரிகள்
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு ஹன்வெல்ல பொலிஸார் மேலதிக கால அவகாசம் கோரியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணால, ஜல்தர பிரதேசத்திலேயே இந்த சம்பவம் அண்மையில் பதிவானது.
பாதிக்கப்பட்ட 16 வயது மாணவி, உள்ளூர் அதிகாரிகளிடம் தாக்குதல் குறித்து முறையிட்டதை அடுத்தே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
