கருமலையூற்று கடற்தொழிலாளர்கள் பிரச்சினை : விமானப்படைத் தளபதியுடன் எம் எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு
திருகோணமலை - கருமலையூற்று பெரியமலைக்குடா பிரதேசத்தில் கரைவலை கடற்தொழிலாளர்களர்களது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனுமதியை மீண்டும் பெற்றுகொள்வது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இன்று (26.04.2023) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் விமானப்படைத் தளபதி எயர்மார்ஸல் சுதர்சன பத்திரன ஆகியோருக்கிடையில் விமானப்படைத் தலைமையகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கரைவலை தொழிலாளர்கள்
இதன்போது கருமலையூற்று - பெரியமலைக்குடா பிரதேசத்தில் கரைவலை தொழிலாளர்கள் தமது கடற்தொழிலை நீண்டகாலமாக செய்து வந்ததாகவும் தற்பொழுது விமானப்படையினாரால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பது நியாயமற்ற விடயம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை பற்றி மிக விரிவான விளக்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இதன்போது எடுத்துரைத்தார்.
குறித்த விடயம் தொடர்பில், மிக விரிவாக ஆராயப்பட்டதுடன் நிபந்தனைகளுடன் அனுமதி
வழங்குவதாகவும் விமானப்படைத் தளபதி எயர்மார்ஸல் சுதர்சன பத்திரன உறுதியளித்துள்ளார்.




