யாழில் கருநிலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று(10) மாலை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது.
இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
இந்த அகழ்வைத் தடுக்கவும், மக்களின் பூர்வீக நிலங்களையும் இருப்பையும் பாதுகாக்கவும் 'கருநிலம் பாதுகாப்பு' என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க இளையோர் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விழிப்புணர்வு போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
இதன் போது அரசியல் பிரதிநிதிகள், இளையோர் என பலரும் கலந்து கொண்டதுடன் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றையும் முன்னெடுத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 13 நிமிடங்கள் முன்

கொற்றவைக்கு பதிலாக ஆஜரான போலீஸ், பதற்றத்தில் குணசேகரன், ஜனனி கண்டுபிடித்த உண்மை... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
