மிக உயர்ந்த தேசிய 'ஸ்ரீ லங்காபிமானி' விருது முன்னாள் சபாநாயகர் கருவுக்கு வழங்கப்பட்டது

Karu Jayasuriya Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Rakesh Feb 03, 2023 12:39 PM GMT
Report

முன்னாள் சபாநாயகரும் நன்மதிப்புக்குரிய அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கரு ஜயசூரிய தேசத்துக்கு ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

மிக உயர்ந்த தேசிய

வாழ்நாளில் ஒருமுறை வழங்கப்படும் கெளரவ விருது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரியவுக்குப் பதக்கம் அணிவித்து விருது வழங்கிக் கௌரவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது ''கரு ஜயசூரியவின் பெருமை மிக்க வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகள்''எனும் நினைவுப் புத்தகத்தை ஜனாதிபதியிடம் கரு ஜயசூரிய வழங்கி வைத்துள்ளார்.

75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் ‘ஸ்ரீ லங்காபிமானி’ எனும் கெளரவ விருதானது இலங்கைப் பிரஜை மற்றும் இலங்கையர் அல்லாத ஒருவருக்கு இலங்கை அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த தேசிய விருதாகும்.

மிக உயர்ந்த தேசிய

‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது

இந்த விருதை ஒரே நேரத்தில் ஐந்து இலங்கையர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும், அதாவது விருதைப் பெற்ற ஐந்து பேர் உயிருடன் இருந்தால் ஆறாவது நபருக்கு விருதை வழங்க முடியாது.

எனினும், விருது பெறுபவரில் ஒருவர் மரணித்திருந்தால் மேலுமொரு நபருக்கு அவ்விருதை வழங்க முடியும்.

2017ஆம் ஆண்டு இலங்கை சங்கீத கலைக்காக டபிள்யூ.டி. அமரதேவாவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாஸ, டி.பி. விஜேதுங்க மற்றும் ஆதர் சி. கிளார்க், லக்ஸ்மன் கதிர்காமர், ஏ.ரி. ஆரியரத்ன, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், கிறிஸ்டோபர் வீரமந்திரி ஆகியோரும் ‘ஸ்ரீ லங்காபிமானி’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மிக உயர்ந்த தேசிய

இனவாதப் போராட்டமன்றி தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் பணி

"நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் இனவாதப் போராட்டமன்றி, தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் பணியையே மேற்கொள்ள வேண்டும்" என்று இவ்விழாவில் உரையாற்றிய கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

75 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைச் சரி செய்து பெருமைமிக்க நாட்டை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க ஒன்றிணையுமாறு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் அனைவரிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.

மிக உயர்ந்த தேசிய

தனது அரசியல் வாழ்வில் எக்காலத்திலும் தான் யாரையும் விமர்சிக்கவில்லை என சுட்டிக்காட்டிய அவர், சட்டத்துக்குப் புறம்பாக எவ்விதமான செயல்களையும் தான் செய்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் முயற்சியின் பலனாக, ஓமல்பே சோபித தேரர் முன்வைத்த நீதி மற்றும் நியாயத்துக்காகத் தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும், இந்த ‘ஸ்ரீ லங்காபிமானி’ தேசிய விருது தான் பின்பற்றிய கொள்கைகளுக்கு வழங்கிய கௌரவமாகும் என்றும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் அங்கீகாரம்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொண்ட அழைப்பின் பேரிலேயே தான் அரசியலுக்கு வந்ததை நினைவுகூர்ந்த கரு ஜயசூரிய, அதன் மூலம் பொதுமக்களுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

நகரபிதா என்ற வகையில் கொழும்பு நகர சபையில் புதிய கலாசாரத்தை உருவாக்க முடிந்ததாகவும், அதன் வெற்றி சர்வதேச ரீதியில் கூட அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மிக உயர்ந்த தேசிய

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அமைச்சர்கள், ஆளும் கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கரு ஜயசூரியவின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US