மாவீரர் நாளை மாற்றி அமைக்க வடக்கு - கிழக்கு ஆயர்கள் திட்டமிடுகிறார்களா?

Mullaitivu Northern Province Tamil People Tribute
By Kanamirtha Nov 16, 2021 04:22 PM GMT
Report

கார்த்திகை 27 ம் திகதி எம் தேசத்துக்காக உயிர்நீத்த மாவீரர்களை அஞ்சலி செலுத்தத் தடை இருக்காது. அன்றைய நாள் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆயர் பேரவையும் ஒன்றிணைந்து எங்களுடைய மாவீரர் நாளை கொண்டாட நீங்கள் வழிவகுக்க வேண்டும் எனத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான பீற்றர் இழஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று மாலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்த் தேசத்தினுடைய வரலாற்றிலே எம் இனத்திற்காகப் போராடி மரணித்தவர்களுடைய வரலாற்று நாள் கார்த்திகை 27ஆகும். அன்றைய தினத்தை மாற்றி அமைக்கும் சக்தியாக இன்று இந்த வடக்கு கிழக்கினை சேர்ந்த ஆயர் பேரவை முனைகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.


உண்மையிலேயே நானும் ஒரு கத்தோலிக்கன். நானும் ஒரு மாவீரனின் சகோதரன் என்ற அடிப்படையிலே இந்த வடக்கு, கிழக்கினை சேர்ந்த ஆயர் பேரவையிடம் கோரிக்கையாக இதை முன்வைக்கிறேன். கத்தோலிக்கர்கள் கார்த்திகை மாதம் இரண்டாம் திகதி இறந்த ஆத்மாக்களுக்கான ஒரு திருவிழாவாக சேமக்கலைகளிலே இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

இருந்த போதும் அதே மாதத்தில் எம் தேசியத்தின் பால் எமக்காகப் போராடி மரணித்த மாவீரர்களுடைய நாளாக கார்த்திகை 27ம் திகதி முப்பது நாற்பது வருடங்களாக நாங்கள் அனுசரித்து வருகிறோம். இது கடந்த காலங்களிலும் தொடர்ந்து வருகிறது.

அதே நாளிலே இதே கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஆயர்கள் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாதிரியார்கள் அந்த நாளிலே அஞ்சலி செலுத்தி வந்துள்ளார்கள். ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னர் சில செய்திகளைப் பார்த்திருந்தேன்.

உயிரிழந்த உறவுகளுக்கு எதிர்வரும் 20 ம் திகதி அஞ்சலி செலுத்த ஒன்றுகூடுமாறு கோரியிருந்தனர். இதன் பின்னர் பல்வேறு எதிர்ப்புக்கள் வந்ததன் பின்னணியில் கத்தோலிக்கர்களை மட்டும் அழைத்ததாக நேற்றைய தினம் செய்திகளில் பார்த்திருந்தேன்.

உண்மையிலேயே கத்தோலிக்கர்கள் கார்த்திகை மாதம் 2ம் திகதி தமது திருவிழாவை கொண்டாடி வருகின்ற நிலையில் மீண்டும் ஒரு நாளை கொண்டாடுவது என்பது சில வேளைகளில் எமது தமிழ் தேசியத்தின் பால் உயிரிழந்த மாவீரர்களுடைய நினைவு நாளை வேறொரு சக்தியினூடாக அந்த நாளை அழிப்பதற்காக தான் இந்த அழைப்பை விடுத்துள்ளார்களா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

    நான் ஒரு மாவீரனுடைய சகோதரன் என்ற அடிப்படையிலே வெளிப்படையாக ,நேரடியாக இந்த ஊடகங்கள் வாயிலாக வடக்கு, கிழக்கு ஆயர்கள் அமைப்பிடம் ஒரு கோரிக்கையை விடுக்கிறேன். தமிழ் மக்களுடைய இந்த போராட்டத்திலே பல அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் எங்களுடைய இனத்துக்கான போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள்.

இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கு ஆயர் பேரவை இந்த தினத்தை மாற்றி அமைப்பது உண்மையிலே ஒரு கேலிக்கூத்தான விடயமா அல்லது இவர்களுக்குப் பின்னால் ஏதும் சக்திகள் இயங்குகின்றதா என்ற கேள்வியும் இப்போதும் எம்மிடம் கேள்விக்குறியாகவே உள்ளது. இதே நேரத்தில் இன்னுமொரு விடயத்தைக் கூறுகிறேன்.

தயவு செய்து எங்களுடைய மாவீரர்களுடைய தினத்தைக் குழப்புவதற்காகவோ அல்லது உங்களுடைய சமய வழிபாடுகளை நீங்கள் வேண்டுமானால் உங்கள் தேவாலயங்களில் நீங்கள் பூசைகளை வைக்கலாம். வருடம் 365 நாளும் இடம்பெறும் ஒவ்வொரு நாள் திருப்பலிகளிலும் இறந்த ஆத்மாக்களுக்காக மன்றாடப்படுகிறது.

அதேநேரத்தில் எமது வரலாற்றுத் திகதியினை மாற்றி அமைத்து 20 ஆம் திகதியினை கோருவது உண்மையிலேயே பொருத்தமற்ற விடயம். ஆகவே இதனை நீங்கள் மாற்றி அமைக்காது கார்த்திகை 27 ம் திகதி எம் தேசத்துக்காக உயிர்நீத்த மாவீரர்களை அஞ்சலி செலுத்தத் தடை இருக்காது.

அன்றைய நாள் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆயர் பேரவையும் ஒன்றிணைந்து எங்களுடைய மாவீரர் நாளை கொண்டாட நீங்கள் வழிவகுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

2020 முதல் நாங்கள் பொதுவெளியிலே இந்த நிகழ்வுகளைச் செய்து வந்தோம். கடந்த முறை பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் நாங்கள் நிகழ்வைச் செய்திருந்தோம். உண்மையிலே இது மாற்றி வந்த அரசாங்கத்தின் பணிப்புரைகள் தான் நாங்கள் பொதுவெளியில் சென்றால் எங்களைக் கைது செய்வதோ அல்லது நீதிமன்ற கட்டளையை வழங்குவதையோ ஒரு உத்தியாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் வழமைபோல் அதேநாள் குறித்த பிரதேசத்தில் அந்த நிகழ்வு இடம்பெறும் என்பது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US