திருக்கார்த்திகை தீபத்திருநாள் (Photos)
ஒளி வடிவத்தில் இருக்கும் இறைவனை வழிபட்டால் உள்ளத்திலும் இல்லத்திலும் அமைதி பிறக்கும் நேர்மறை சக்தி அதிகரிக்கும் என்பர்.
இன்று செவ்வாய்க்கிழமை திருக்கார்த்திகை தீபத்திருநாள்.
யாழ். பல்கலைக்கழகம்
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மாலை மாணவர்களினால் கார்த்திகை தீபத்திருநாள் அனுஸ்டிக்கப்பட்டது.
மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தை சூழ தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டதோடு பரமேஸ்வரா சிவன் ஆலயம் முன்றலிலும் தீபச்சுடர் ஏற்றப்பட்டது.
குறித்த கார்த்திகை தீபத்திருநாள் சிங்கள இஸ்லாமிய தமிழ் மாணவர்கள் இன பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் செம்மணி வாயில் சிவலிங்கப்பெருமான் குடமுழுக்கு வைபவம் இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் கார்த்திகை விளக்கீடான இன்றையதினம் மின்சார தீபங்களுக்கு மத்தியில் செம்மணி வாயில் சிவலிங்கப் பெருமானின் திருக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் பொது இடங்களில் வீடிகளில் பொதுமக்களால் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
வீடுகள் வர்த்தகநிலையங்களில், ஆலயங்களில் தீபச்சுடர்கள் ஏற்றி பொதுமக்கள் களிப்புடன் கார்த்திகை தீப திருநாளை கொண்டாடியுள்ளனர்.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, சம்மாந்துறை, பெரியநீலாவணை, கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, வீரமுனை, நாவிதன்வெளி, அன்னமலை, மத்தியமுகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில் ,கோளாவில் ,ஆலையடிவேம்பு, பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம் நடைபெற்ற நிலையில் ஏனைய தெய்வ ஆலயங்களில் சொர்க்கப்பானை எரித்து கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம்
தீபவொளி கார்த்திகை விரத உற்சவத்தினமான இன்றையதினம் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிலையில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இதன்போது விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வந்து ஆலய முன்றலில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"யை அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.
இந்த திருவிழாவில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று வீடுகளிலும் வீதிகளிலும் அடியார்கள் திருவிளக்கு ஏற்றி
திருக்கார்த்திகை விளக்கீட்டை அனுஸ்டித்தனர்.








பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
