பொதுப்பாதுகாப்பு அமைச்சரை கடுமையாக சாடிய கர்தினால்
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடுமையாக சாடியுள்ளார்.
பொரளை தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கர்தினால், தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொலிஸார் பொதுவாக தாங்களுக்கு எது தேவையோ அதனையே வாக்கு மூலமாக பதிவு செய்து கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது அமைச்சரின் எதிர்வினையின் ஊடாக தெளிவாக தெரிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் நேர்மையானவர் என்றால் சாம் முன்வைத்த சாட்சிகள் குறித்து விசாரணை செய்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது எனவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமொன்றை நிரூபிப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அமைச்சர் எமக்கு கூறும் கதைகளை கொண்டை கட்டிய சீனர்களிடம் சொல்லட்டும், இவ்வாறான அமைச்சர்களிடம் நீதி நேர்மையை எதிர்பார்க்க முடியாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri