11 இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு விசேட விசாரணை
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவினால் (Wasantha Karannakoda) சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவை தொடர்பான விசாரணைக்காக ஐவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது, இன்று (07.06.2024) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வசந்த கரன்னாகொடவின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற குழு
இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கை இரத்து செய்யுமாறு கோரி வசந்த கரன்னாகொட ரிட் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
இதற்கமைய, குறித்த கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில், இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும், மனுவை விசாரிப்பதற்காக ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்
அதேவேளை, குறித்த மனு எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |