யோஷித ராஜபக்ச விவகாரம்! இன்றும் விசாரணைக்கு முன்னிலையாகாத வசந்த கரன்னாகொட
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட உடல்நலக்குறைபாடு காரணமாக இன்று(22) இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படைத் தளபதியாக இருந்தபோது தேவையான தகுதிகளை மாற்றி, யோஷித ராஜபக்ச இலங்கை கடற்படையில் நிர்வாக அதிகாரியாக எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பது குறித்தும், அரசாங்க நிதியைத் தவறாக பயன்படுத்தி பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் எவ்வாறு பயிற்சி பெற்றார் என்பது குறித்தும் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்க ஆணைக்குழுவினால் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
தகுதியில்லாமல் அரச செலவில் பயிற்சி
இந்நிலையில், உடல்நலக்குறைபாடு காரணமாக ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கபடுகின்றது.
இதற்கு முன்னர் ஜூன் 16 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், தனக்கு அழைப்பாணைக் கடிதம் கிடைக்கவில்லை என்றுக்கூறி, அன்று முன்னிலையாக அவர் மறுத்திருந்தார்.
கடந்த 2006ம் ஆண்டு யோஷித ராஜபக்ச, கடற்படையில் (Sri Lanka Navy) சேருவதற்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பூர்த்தி செய்யாத நிலையில், கடற்படையின் விதிமுறைகளை தளர்த்தி இரண்டாம் லெப்டிணன்ட் பதவிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக யோஷித ராஜபக்ச ஜூன் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam