கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரிடம் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணை
முல்லைத்தீவு (Mullaitivu) - கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான க.விஜிந்தனை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரை, நேற்று (19.06.2024) கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு (CID) வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தருமாறு முல்லைத்தீவில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
சட்ட நடவடிக்கைகள்
இதற்கமைய, அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு அலுவலகத்திற்கு சென்றபோது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அவர் இன்றும் (20) தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவரின் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam
