காரைநகர் கோவளம் வெளிச்சவீடு புனரமைப்பு - தொல்லியல் திணைக்களம் முட்டுக்கட்டை
காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் நேற்று (27.03.2026) நடைபெற்றது.
இதன்போது, வெளிச்சவீடு தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் காணப்படுவதால், அது ஏன் இன்னும் புனரமைப்பு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.
தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகத்தர், புனரமைப்புக்கு தேவையான நிதி இல்லை என பதிலளித்தார்.
இதற்கு, ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி கருத்து தெரிவிக்கையில்,
வெளிநாட்டில் உள்ள ஒருவர் தான் புனரமைப்பதற்கு தயாராக இருப்பதாக தொல்லியல் திணைக்களம் தெரிவித்ததாகவும், அந்த நிதியை அவர்களிடம் வழங்குமாறு கூறியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அதனை திருத்தி வழங்கினால், தொல்லியல் திணைக்களம் அதனை பராமரிப்பீர்களா என கேட்டார்.
வீடு புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு
இதற்குப் பின்னர், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி கூறியதாவது, கோவளம் வெளிச்சவீட்டை புனரமைப்பதற்கு கடந்த ஆறு ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.
இதற்கான ஒரு கோடி 25 இலட்சம் ரூபா நிதியை புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒருவர் வழங்க தயாராக இருக்கிறார். நான் மூன்று தடவைகள் நேரில் சென்று கேட்டபோது, “பணத்தை தருவோம், ஆனால் அபிவிருத்தி பணிகளுக்கு வர வேண்டாம்” என கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி, குறித்த விடயம் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இதுகுறித்து பேசப்படும். எனவே உங்கள் அதிகாரிக்கு இதை தெரியப்படுத்துங்கள் என தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தருக்கு குறிப்பிட்டுள்ளார்.