கந்தளாய் சேருவில பிரதான வீதியில் விபத்து - நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
கந்தளாய் சேருவில பிரதான வீதியில் வான் ஒன்று பாதையை விட்டு விலகி குடை சாய்ந்ததில் அதில் பயணித்த நால்வர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகலிலிருந்து சேருவிலைக்கு சென்ற வேன் ஒன்றே இவ்வாறு பாதையை விட்டு விலகியுள்ளதாகவும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆணும், இரண்டு பெண்களும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
