காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை குறித்து வெளியான அறிவிப்பு
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், எதிர்வரும் 22ஆம் திகதி (22.02.2025) காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

பயணச்சீட்டு பதிவு
இந்த நிலையில் www.sailsubham.com என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து பயணச்சீட்டுகளை பதிவு செய்ய முடியும்.
இந்த கப்பலானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் சேவையில் ஈடுபடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam