கஞ்சிபானி இம்ரானுக்கு நீதிமன்றம் பிணை
பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் மொஹமட் அஹமட் நஜீப் இம்ரான் எனப்படும் கஞ்சிபானி இம்ரானுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பிணை
புதுக்கடை பிரதான நீதவான் நேற்றைய தினம் பிணை வழங்கியுள்ளார்.
50 இலட்சம் ரூபா சரீரப் பிணை மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா ரொக்கப் பிணை அடிப்படையில் கஞ்சிபானி இம்ரான் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கஞ்சிபானி இம்ரானுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மீளப் பெறப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
கஞ்சிபானி இம்ரானுக்கு எதிராக முன்னதாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும் பின்னர் சட்ட மா அதிபர் இந்த குற்றச்சாட்டுக்களை மீளப் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கஞ்சிபானி இம்ரான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
