கஞ்சிப்பானி இம்ரான் கைதுச் செய்தி! ஊடங்களுக்கு வெளியிட முடியாத இரகசிய நகர்வு - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
பாதாள உலகக் குழுவின் தலைவரான கஞ்சிப்பானி இம்ரான் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சிப்பானி இம்ரான் கைது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவனான கஞ்சிப்பானி இம்ரான் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகள் எதுவும் உண்மை கிடையாது.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. எனினும், கஞ்சிப்பானி இம்ரான் இன்னும் கைது செய்யப்படவில்லை.
கஞ்சிப்பானியைக் கைது செய்யும் செயல்முறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்ட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவது முறையற்றது என குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan