சுகாதாரத் துறைக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடமிருந்து ஒரு நற்செய்தி
அரச வைத்தியசாலைகளில், சிடி (CT) ஸ்கேனர்கள் மற்றும் எம்ஆர்ஐ (MRI) இயந்திரங்கள் போன்ற உபகரணங்களுக்கான அனைத்துத் தேவைகளும் அடுத்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் மருந்துத் துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முக்கிய உபகரணங்கள்..
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் அனுசரணையாளரான குப்பியாவத்தை போதானந்த தேரர் கலந்துகொண்டார்.
பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri