சர்வதேசப் டி20 போட்டிகளிலிருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு
நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான கேன் வில்லியம்சன் (Kane Williamson) சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
35 வயதான வில்லியம்சன், நியூசிலாந்துக்காக டி20யில் 2575 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
கேன் வில்லியம்சன்
அவரது சராசரி 33 அதில் 18 அரைசதங்கள் மற்றும் அதிகபட்சமாக 95 ஓட்டங்கள் அடங்கும்.
2011ல் டி20யில் அறிமுகமான அவர், 75 போட்டிகளில் நியூசிலாந்து அணித்தலைவராக பணியாற்றி, 2016 மற்றும் 2022 உலகக் கோப்பை அரையிறுதிக்கும், 2021 இறுதிப்போட்டிக்கும் அணியை வழிநடத்தினார்.

எனினும், இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து நியூசிலாந்துக்காக விளையாடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது எனக்கு சரியான நேரம், இந்த வடிவத்தில் விளையாடிய நினைவுகள் எனக்கு எப்போதும் சிறப்பானது அணிக்காகவும் எனக்காகவும் இது சரியான முடிவு.
வரவிருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய நேரம் இது. அவர் மேலும், “மிட்ச் சிறந்த தலைவன். அணியை முன்னேற்றும் திறன் அவருக்கு உண்டு.
இனி இந்த வடிவில் அணி மேலும் முன்னேறும் என நம்புகிறேன். நான் அவர்களை தொலைவிலிருந்தும் ஆதரிப்பேன் என வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
கேன் வில்லியம்சனின் இந்த ஓய்வு அறிவிப்புடன், கிரிக்கெட் உலகில் புகழ்பெற்ற ‘ஃபப் 4’ (FAB 4) என்று வர்ணிக்கப்பட்ட நான்கு முன்னணி வீரர்களும் T20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam