பாடசாலை மாணவியொருவரின் விபரீத முடிவு! பொலிஸார் தீவிர விசாரணை
கண்டி - கட்டுகஸ்தோட்டை மகளிர் உயர்தரப் பாடசாலையின் 10 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்திலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதினைந்து வயதுடைய மாணவி நேற்று (09.05.2023) முற்பகல் 11.30 மணியளவில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலை வெளியிட்ட தகவல்
இப்பாடசாலையின் மாணவ தலைவியான குறித்த மாணவி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றனது.
குறித்த மாணவியின் முதுகெலும்பு பலத்த சேதமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதோடு, சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஆர். சி. ராஜபக்ச தலைமையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.



