கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியில் நேருக்கு நேர் மோதி பேருந்து விபத்து - 8 பேர் வைத்தியசாலையில்..!
கண்டி - யாழ்ப்பாணம் A9 வீதியில் கட்டுகஸ்தோட்டையின் கலுகல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து இன்று (15) பிற்பகல் சுமார் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து கண்டியை நோக்கியும், பாடசாலை பேருந்து எதிர் திசையிலும் சென்று கொண்டிருந்த போதே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவர்களும், பேருந்து சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தோட்டை பிராந்திய வைத்தியசாலை மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You may lIke This..