துண்டாக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்தி கண்டி வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை
இயந்திரத்தில் சிக்கிய பெண்ணொருவரின் கையை மீண்டும் வெற்றிகரமாக பொருத்தி கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் அமில சசங்க ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
தென்னை அரைக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது, திடீரென வேலை செய்ய ஆரம்பித்ததால், வலது கையில் முழங்கைக்கு மேல் உள்ள பகுதி, இயந்திரத்தில் சிக்கி இரண்டாக வெட்டுப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதுடைய பெண்ணே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் கை வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

சாதனை படைத்த வைத்தியர்கள் குழு
கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் அமில சசங்க ரத்னாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் வைத்தியர் உதய கிரிடேன, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சமிலா ஜயரத்ன, வைத்தியர் சதீர பிரேமரத்ன, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், சிரேஷ்ட பதிவாளர் உதர ரத்நாயக்க, மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் உடுவெல, வைத்தியர் கசுன் மற்றும் சேனக ஆகியோர் இந்த சத்திரசிகிச்சையிளை மேற்கொண்டுள்ளனர்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் ஷ்யாமா நாணயக்கார, சிதாரா சுரவீர, சந்திமா சேனவிரத்ன, திலினி அபேவர்தன, எரண்டி மதுஷானி மற்றும் சசானி கோஸ்டா உள்ளிட்ட தாதியர் குழுவும் இந்த அறுவை சிகிச்சைக்கு ஆதரவளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam