கண்டி எசல பெரஹராவுடன் தொடர்புடைய மூன்று கைதுகள்
கண்டி எசல பெரஹரா தொடங்குவதற்கு முன்னர் 100 கிராம் ஹெரோயினுடன் ஒரு யானைப் பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இருந்து யானையுடன் யானைப் பாகன் கண்டி எசல பெரஹராவுக்கு சென்றிருந்தார்.
தோட்டாக்களுடன் கைது
இந்தநிலையில் ஹெரோயின் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதன் விளைவாக, குறித்த யானை பெரஹராவில் பங்கேற்கவில்லை.
இதற்கிடையில், பாதுகாப்புப் படையினரின் அம்பியூலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் மூன்று டி56 ரக தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார். கண்டியின் சோதனைச் சாவடி ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, மற்றொரு சம்பவத்தில், கொழும்பைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவர் பெரஹரா பகுதிக்குள் நுழைய முயன்றபோது இரண்டு தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 11 மணி நேரம் முன்

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! - 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை Cineulagam
