கண்டி பெரஹராவுக்குள் வாளுடன் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய கொழும்பு நபர்
கண்டி பெரஹரா ஊர்வலம் சென்ற வீதிக்குள் பயணப் பையில் வாள் ஒன்றை மறைத்துக்கொண்டு நுழைய முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி, ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்காவிற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்
அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
சந்தேகநபர் இந்த வாளை ஒரு பையில் எடுத்துச் சென்றதை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், எதற்காக வாளை எடுத்து வந்தீர்கள் என வினவியபோது, சந்தேகநபர் நண்பர் ஒருவர் இதனை தலந்தாவுக்கு காணிக்கையாக வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள்
கடந்த 2016ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
