கண்டியில் யாரும் செல்ல முடியாத பல பகுதிகள்.. முஜுபுர் ரஹ்மான் எம்.பி தகவல்
கண்டி மாவட்டத்தில் யாரும் செல்ல முடியாத பல பகுதிகளில் தங்களின் சொந்தங்கள் சிக்கியுள்ளதாக பலர் தொலைபேசி வாயிலாக தங்களுக்கு அறிவித்துள்ளதாக முஜுபுர் ரஹ்மான் எம்.பி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்த கடினமாகவுள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி எப்போதும் கூறுகிறார்.
தொலைதூர கிராமங்களின் நிலை
அந்த கருத்துக்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும்.
மேலும், எதிர்காலத்தில் பல சவால்கள் உள்ளன.நாட்டில் உணவுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்படலாம். நாட்டில் உணவு மற்றும் பானங்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதற்கு அரசாங்கம் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அரசாங்கத்தில் உள்ளவர்கள் எதிர்க்கட்சியை வெறுப்புடன் பார்க்கும் நிலையுள்ளது.
நாட்டின் எதிர்காலத்திற்கு உதவ தயார். அதற்கு வேலை செய்வதற்கான ஒரு வழிமுறையையும் உருவாக்க வேண்டும் என்றார்.
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri