பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற ஆறு பிக்குகளின் மோசமான செயல்!
கண்டி நகரின் மத்தியில் மதுபோதையில் பிக்கு அடையாள அட்டையுடன் இருந்த ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நகரின் மையப்பகுதியில் குடிபோதையில் இருந்த இவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டைகளைக் கேட்ட பொலிஸார் அவ்வாறு செய்யத் தவறியதையடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற பிக்குகள்
விசாரணையின் போது அவர்கள் பல விகாரைகளில் பணிபுரியும் பிக்குகள் என தெரியவந்துள்ளது.
பிக்குகளின் அடையாள அட்டைகளை முன்வைத்த இக்குழுவினர் பேராதனை மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவினர் தங்களுடைய மேலங்கிகளைக் கழற்றிவிட்டு காற்சட்டை மற்றும் சேர்ட் அணிந்து கண்டி நகருக்கு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அந்தந்த ஆலயங்களின் தலைவர்களுக்கு தெரியப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
