ஒன்று சேர்ந்த அலிபாவாவும் 40 திருடர்களும் கூட்டம்.. விமர்சித்த எம்.பி
இந்த நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி புரிந்து வங்குரோத்தாக மாற்றிய அலிபாவாவும் 40 திருடர்களும் கூட்டம் இன்று ஒன்றாக சேர்ந்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டை பெறுப்பேற்று ஒரு வருட பூர்தியை முன்னிட்டு கடந்த 20 வருடத்துக்கு பின்னர் மட்டக்களப்பில் இருந்து கண்டி ஊடாக கம்பளைக்கான பேருந்து வேவையொன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை(21) மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைத்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஒரு குடும்பத்தின் தந்தை ஒருவர் அனைவரையும் பாதுகாத்து அரவணைத்து குடும்பத்தை முன்னோக்கி செல்லுவாரே அதேபோல இந்த நாட்டின் மக்களை தன்னுடைய பிள்ளைகள் போல அன்பும் பாசமும் காட்டி பாதுகாப்பை வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டிருக்கின்றார்.
வங்குரோத்து நாடு
இதனை பொறுத்துக் கொள்ளாத எதிர்கட்சியினர் அலிபாவாவும் 40 திருடர்கள் போன்று மக்களால் வெறுக்கப்பட்ட ஜக்கிய தேசிய கட்சியின் 75ஆவது ஆண்டு விழாவில் அந்த திருடர் கூட்டம் ஒன்றாக சேர்ந்துள்ளது. இந்த திருடர் கூட்டத்தில் மொட்டுக் கட்சியை சார்ந்தவர்கள், சுதந்திரக் கட்சியை சார்ந்தவர்கள், திகாம்பரம், ஏல்.எம்.ஹிஸ்புல்லா போன்ற தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர்.
இவர்கள் இந்த நாட்டை மீண்டும் ஒரு மோசமான பாதாளத்துக்கு கொண்டு சென்று நாட்டை வங்குரோத்து அடைந்த நாடாக மாற்றுவதற்காக முயற்சி செய்கின்றனர்.
இந்த தலைவர்கள் தான் கடந்த காலங்களில் இந்த நாட்டை ஆட்சி புரிந்தவர்கள். இவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் தான் இந்த நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. இதன் விளைவு என்ன என்பதை பார்த்திருப்பீர்கள். இறுதியாக இந்த நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாக மாறியது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



