தங்காலையில் சிக்கிய மற்றுமொரு ஐஸ் லொறி.. பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை பகுதியில் சுமார் இருநூறு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாரிய அளவில் போதைப்பொருள் கடத்திய லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புலனாய்வு தகவல்களின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது லொறி தடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு துப்பாக்கிகள்
லொறியை சோதனையிட்ட போது சுமார் 2000 கிலோ கிராம் எடையுடைய ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன்) மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நான்கு பொதிகளில் இந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், போதைப்பொருள் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ரிவால்வர்களும் மீட்கப்பட்டன.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



