கந்தானை துப்பாக்கிச்சூட்டின் சந்தேக நபர்: பொலிஸார் வெளியிட்டுள்ள புகைப்படம்
கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி அன்று கந்தானையில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரைக் கைது செய்ய பொிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
தொடர்பு கொள்ள...
குறித்த சம்பவம் தொடர்பில், கந்தானை பொலிஸாரின் விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மேலும் ஆறு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், முக்கிய சந்தேக நபரின் அடையாளம் கண்டறியப்படாதிருந்த நிலையில், தற்போது துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சாலையில் நடந்து செல்லும் சிசிரிவி காட்சிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள், 071-8591595 அல்லது 071-8591594 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்: அவரின் சம்பளம் மற்றும் சொத்துமதிப்பு தெரியுமா? News Lankasri
