காட்டு யானைகளின் நிலையமாக மாறும் கந்தளாய் சூரியபுர செயற்கை பசளை மத்திய நிலையம்(Video)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட சூரியபுர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் செயற்கை பசளை மத்திய நிலையம் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவு பெறாது காணப்படுகின்றது.
செயற்கை பசளை மத்திய நிலையம்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முப்பது மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த செயற்கை பசளை மத்திய நிலையமானது காட்டு யானைகளின் வாழ்விடமாக மாறி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட சூரிய புற ஒன்பதாம் கட்டைப் பகுதியிலே இவ் செயற்கை உர மத்திய நிலையம் அமையவுள்ளது.
குப்பைகளை பயன்படுத்தி செயற்கை உரங்களை தயாரிக்கும் மத்திய நிலையமானது கடந்த 2022.11.10 ஆம் திகதி இயற்கை வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கட்டாக்காலி நாய்களின் கூடாரம்
இன்று வரை இச் செயற்றிட்டம் முழுமை பெறாமல் காணப்படுவதோடு, இரவு மற்றும் பகல் வேளைகளில் யானைகள் அப்பகுதியை ஆக்கிரமிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்றிட்டமானது அந்த வளாகத்தினை சுற்றி பற்றைக்காடுகள் வளர்ந்துள்ளதோடு,வேலிகள் இன்றி காணப்படுகின்றது. கட்டாக்காலி நாய்களின் கூடாரமாகவும் மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கந்தளாய் மூதூர் பிரதான வீதியில் அமைந்துள்ள இவ் செயற்கை நிலையம் எப்போது
நிறைவு பெறும் என எதிர்பார்போடு உள்ளது குறிப்பிடத்தக்கது.








உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
