ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தின் சூரன் போர்(Photos)
கந்தஷஷ்டி விரத்தின் முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இதேவேளை நேற்றைய தினம் கந்தசஷ்டி கும்பம் சொரிதலுடன் நிறைவுபெற்றது.
மட்டக்களப்பு, ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு சிற்ப்பாக நடைபெற்றது.
ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு, திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது.
சூரன் போர்
முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கந்தசஸ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்று வந்தன.
ஐந்து தினங்கள் பக்தர்கள் விரதமிருந்து கந்தசஸ்டி விரதம் அனுஸ்டித்ததுடன் தினமும் ஆலயத்தில் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.
சூரசம்ஹாரத்திற்கான வேல் கல்லடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் பெற்றுக்கொண்டு வேல்படையானது ஆலயத்தினை ஊர்வலமாக வந்தடைந்து.
தமிழர்களின் கலாசார பண்பாட்டு இசைவாத்தியங்கள் முழங்கள் ஊர்வலம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும்போது நடைபெற்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சூரன் போர் நடாத்தப்பட்டது.










