QR தொடர்பில் முன்னாள் அமைச்சர் கஞ்சன வெளியிட்ட அறிவிப்பு
முன்னாள் எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேக்கரவால் அறிமுகப்படுத்தப்பட்டதே எரிபொருளுக்கான QR முறைமை என இன்று இது பேசுபொருளாக்கப்பட்டுள்ளன.
அவருக்கே அதன் பெருமை சேர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாராட்டப்பட வேண்டியவர்கள்
பொருளாதார நெருக்கடியில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருளுக்கான QR குறியீட்டை உருவாக்கியதற்காக யாருக்காவது பாராட்டு தெரிவிக்க வேண்டுமானால் அது எனக்கானதல்ல.
அந்த பெருமை ICTA,-வில் உள்ள ஜெயந்த டி சில்வா மற்றும் அவரது குழுவினருக்கும், டயலொக் ஆக்சியாட்டாவில் Dialog Axiata உள்ள சுபுன் வீரசிங்க மற்றும் அவரது குழுவினருக்கும் மில்லினியம் Millenium IT.-யில் உள்ள ஷெவன் குணதிலக்க மற்றும் அவரது குழுவினர் ஆகியோருக்கு தான் உரித்தாக வேண்டும்.
If anyone wants to give any credit to anyone for developing the National Fuel Pass QR based system, it should be to Jayantha De Silva & his team at ICTA, Supun Weerasinghe & his team at Dialog Axiata, Shevan Goonathilake & his team at Millenium IT.
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 16, 2026
Their teams developed the… https://t.co/erivV5qv98
இந்த குழுவினர் என்னை முதன் முறையாக சந்தித்து கலந்துரையாடி இரண்டு வாரங்களுக்குள் தளத்தை உருவாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கத்திற்கு எந்த செலவும் இல்லாமல் ஒரு மாதத்திற்குள் அதை செயல்படுத்த முடிந்தது. இந்த குறியீட்டை செயல்படுத்துவதற்கு பல தரப்பினரிடமிருந்தும் ஆதரவும் அர்ப்பணிப்பும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam