மெக்சிகோவை போல் இலங்கையிலும் ஆயுதக் குழு உருவாவதற்கான சாத்தியங்கள்: வெளிவந்துள்ள தகவல்கள்
மெக்சிகோவில் இருக்கும் போதை பொருள் கும்பல்களை சேர்ந்த ஆயுதக் குழுக்கள் போல் இலங்கையிலும் உருவாக்க பல செயற்பாடுகள் நடைபெறுவதாக சர்வதேச தகவல்களில் இருந்து தெரியந்துள்ளது.
அண்மையில் தெற்கு கடலில் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட இரு ஆழ்கடல் படகுகள் நேற்று முன்தினம் திக்கோவிட்ட மீனவத் தொழில் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதில் 300 கிலோ போதை பொருள் இருந்ததோடு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இரு ஏகே 47 மற்றும் எம்.16 ஒன்று-8 பிஸ்டோல் இருந்ததாக கடற்படை அறிவித்திருந்தது.
ஆயுதக் கடத்தல்
எம்.16 ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கிகள் ஆகும். கடத்தப்படும் சில ஆயுதங்களே கைப்பற்றப்படுகின்றன பல ஆயுதங்கள் எப்படியோ கொண்டு வரப்படுகின்றன.
இந்த போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் பாகிஸ்தானிலுள்ள மெக்ரான் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படுகிறது.
அண்மையில் இந்திய கடலோர காவல் கடையால் ரவி அன்ச என்ற படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தியாவின் த இந்து பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையில் இந்திய புலனாய்வுத் துறையை மேற்கோள் காட்டி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் ஹாஜி சலீம் என்ற போதை கடத்தலின் பெரும் புள்ளியே ஆயுதங்களை வழங்குவதாகவும்.போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் பாகிஸ்தானில் இருந்து அரபிக் கடல் வழியில் இலங்கைக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கிறது.
இது பாரிய ஆபத்தான விடயமாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இன்றிருக்கும் போதைக்கு எதிரான நடவடிக்கையால் இந்த ஆயுதக் குழு உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கு கஞ்சிபானி இம்ரான் ஹாஜி சலீமுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் இதற்கான ஏற்பாடுகளை செய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு உனாகுரூவே சாந்த பரவி சுதா கரந்தெனி சுந்தா கொஸ்கொட சுஜி ஆகியோரும் உதவி செய்யக் கூடும் என தகவல்களில் தெரியவந்துள்ளது.