நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
அரசாங்கத்திடம் தற்போது போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (23.07.2023) காலை 8.30 மணி நிலவரப்படி அரசாங்கத்திடம் 133,936 மெற்றிக் தொன் டீசலும் 6,192 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் 35,402 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் 5,367 மெற்றிக் தொன் ஒக்டேன் 95 பெற்றோல் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
Stock Details as at 2023/07/23 08:30 hrs For All CPSTL/CPC Plants
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 23, 2023
Diesel - 133,936
Super Diesel - 6,192
92 Pet - 35,402
95 Pet - 5,367
JET Fuel - 30,173
(All figures in MT)
CPSTL SAP ERP System
*No deliveries on Sundays pic.twitter.com/sJ8c89G6CJ
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு
மேலும், இன்று காலை நிலவரப்படி அரசிடம் 30,173 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக அரசாங்கத்தின் எரிபொருள் இருப்பில் சில குறைப்புக்கள் காணப்பட்ட போதிலும், அது மீளமைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |