எரிபொருள் கோட்டா குறித்து எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு
இலங்கையில் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தேவையான மதிப்பீட்டின் பின்னர் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் கோட்டா அடுத்த மாதம் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டுவிட்ட பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மீளாய்வு செய்யப்பட்ட விடயங்கள்
அத்துடன், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் (CPC) அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு போக்குவரத்து திட்டம் மற்றும் விநியோகம் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதித் திட்டங்கள், சுத்திகரிப்பு செயற்பாடுகள், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள், QR ஒதுக்கீடுகள், சேமிப்புத் திறன், மொத்த தானியக்கமாக்கல், பெட்ரோல் நிலையங்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் விநியோகம் ஆகியவை மீளாய்வு செய்யப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
Fuel cargo plan & supply for the next 6 months was reviewed with CPC. Fuel import plans, refinery operations, refinery upgrade proposals, QR quotas, storage capacity, stock automaton, agreements with fuel stations, distribution as was reviewed & discussed. Fuel quotas will be… pic.twitter.com/7XYF9uMukv
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 20, 2023

