கிழக்கு மாகாணத்தில் இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு கஞ்சன விஜயசேகர இணக்கம் (Photos)
கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இணக்கம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று(14.08.2023)இடம்பெற்றுள்ளது.
சோலார் பேனல்களை நிறுவும் திட்டம்
கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத் திட்டமிடுதல் மற்றும் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கு இலவச சோலார் பேனல்களை நிறுவுவதல் ஆகியவற்றுக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர்,பிரதம செயலாளர், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அரச அதிபர்கள், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.










ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
