அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் ஆசிய வம்சாவளி அரசியல்வாதி
வரலாற்றிலேயே, அமெரிக்க (US) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் ஆசிய வம்சாவளி பெண் அரசியல்வாதியாக கமலா ஹாரிஸ் (Kamala Harris) திகழ்கின்றார்.
2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவைப் பெறுவதற்குத் தேவையான பெரும்பான்மையான கட்சிப் பிரதிநிதிகளை வென்றெடுப்பதில் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கமைய, இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
பெரும்பான்மையில் வெற்றி
இந்நிலையில், கமலா ஹாரிஸ், அனைத்து மாநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்தும் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளார் எனவும், வாக்கெடுப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிடுவார் எனவும் ஜனநாயக தேசியக் குழுவின் தலைவர் ஜெய்ம் ஹாரிசன் உறுதிபடுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தான் இந்த வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதல் ஆசிய வம்சாவளி பெண் அரசியல்வாதியாக கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
