உக்ரைன் எல்லையில் தீவிரமடையும் போர் பதற்றம்! ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள கமலா ஹாரிஸ்
ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா போரை விரும்பவில்லை என்று கூறினாலும் அதன் செயல்பாடுகள் நம்பத் தகுந்ததாக இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யா தனது இராணுவ படைகளை உக்ரைன் எல்லையிலிருந்து விலக்கி வருவதாக தெரிவித்துள்ள நிலையில், மேலும் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குவித்து வருகின்றது.
மேலும்,உக்ரைன் நாட்டு எல்லை பகுதியில் ரஷ்யா தனது போர் விமானங்களை குவித்து வருவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
அதே சமயம் உக்ரைன் எரிவாயு ஆலை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா உக்ரைனை நோக்கி முன்னேறினால், இதுவரை இல்லாத வகையில் கடுமையான பொருளாதார தடை விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.