இலங்கையில் சீன இராணுவ சீருடைகளா? பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு
திஸ்ஸமஹாராமயவில் உள்ள 'திஸ்ஸாவேவா' வாவியில் மண்ணை அகற்றுவதற்கான தற்போதைய திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் உறுப்பினர்கள் அல்லர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் சீருடைகளையே அந்த ஊழியர்கள் அணிந்திருந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தொடுத்த கேள்வியைத் தொடர்ந்து தூதரகம் இந்த பதிலை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் எதிர்காலத்தில் சர்ச்சைக்குரிய இராணுவ பாணி சீருடைகளை அணிவதைத் தவிர்ப்பதற்கு அந்தந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் சீனத் தூதரகத்தை கேட்டுள்ளார்.
இதுபோன்ற எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க தெற்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த விடயம் உள்ளூரில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
