பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஆடை விவகாரம்! - பாதுகாப்பு செயலாளர் சீன தூதரகத்திடம் விசாரணை
திஸ்ஸமஹராமாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சீன ஊழியர்கள் அணிந்திருந்த உருமறைப்பு சீருடைகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன (ஓய்வு) இலங்கையில் உள்ள சீன தூதரகத்தை விசாரித்துள்ளார்.
சீன இராணுவ சீருடைக்கு ஒத்த ஆடை அணிந்த வெளிநாட்டவர்கள் திஸ்ஸமஹராமாவில் இருப்பது தொடர்பில் எதிர்க்கட்சி சமீபத்தில் கேள்வி எழுப்பியது.
திஸ்ஸமஹராமாவில் ஒரு திட்டத்துடன் இணைக்கப்பட்ட தொழிலாளர்கள் சீன இராணுவ சீருடைக்கு ஒத்த ஆடைகளை அணிந்திருப்பதைக் காணலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷா நானாயக்கார நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அவர்கள் சீன நாட்டின் இராணுவத்தினர் அல்லவென சீன தூதரகம் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
குறித்த நபர்கள் அணிந்திருந்த ஆடையின் துணிகள் சீன நிறுவனத்தின் சீருடையில் ஒரு பகுதி என்று தூதரகம் பாதுகாப்பு செயலாளரிடம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் சர்ச்சைக்குரிய இராணுவ பாணி உருமறைப்பு சீருடைகளை அணிவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் சீன தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுபோன்ற சீருடைகளை ஊழியர்கள் அணியாமல் பார்த்துக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சும் உள்ளூர் நிறுவனத்திற்கும் அறிவுறுத்தியுள்ளார்.





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
