களுவாஞ்சிக்குடி பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பேருந்து நடத்துநர் மரத்தில் கட்டிவைத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்து உரிமையாளர் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறித்த வழக்கானது நேற்று (8) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அடிக்கடி முரண்பாடுகள்
அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நடத்துநரான இளைஞன் கல்முனையைச் சோந்த தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரின் கல்முனை கதுருவெல பிரதேசத்துக்கான பிரயாணிகள் சேவை நடத்துநராக கடமையாற்றி வந்துள்ளார்.

இதன்போது களுவாஞ்சிக்குடி மகிளுரைச் சேர்ந்த உரிமையாளரது பேருந்து கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில் இரு வண்டிகளின் நேர அட்டவணையில் நிமிட கணக்கான வித்தியாசத்தினால் பிரயாணிகளை ஏற்றுவதில் அடிக்கடி முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் 5ம் திகதி சனிக்கிழமை கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்து சாரதியுடன் குறித்த தாக்குதலுக்கு உள்ளான நடத்துநர் ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திய நிலையில் அவருக்கு மதுபோதை அதிகரித்த நிலையில் அவரது கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளது.
பாதிக்கப்படவரின் உறவினர்கள்
காணாமல் போன கையடக்க தொலைபேசி தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ள அவர், சம்பவதினமான 7ம் திகதி கையடக்க தொலைபேசியைத் தேடி மீண்டும் களுவாஞ்சிக்குடிக்கு சென்று குறித்த பேருந்தில் தேடிய நிலையில் அவரை பேருந்து உரிமையாளர் மற்றும் சாரதி பேருந்தில் திருடியதாக பொய்யாக தெரிவித்து பாழடைந்த காணிக்குள் இழுத்துச் சென்று தென்னைமரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடத்துநர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து திருட்டில் ஈடுபட்டதால் பிடித்து தாக்கியதாக கூறப்பட்டமை உண்மைக்கு புறம்பானது என பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேவேளை பாதிக்கப்படவரின் உறவினர்கள் மனித உரிமை ஆணையகத்தில் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் நடந்த உண்மையை விளங்கி கொண்டு கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
இந்நிலையில், இருவரையும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri