மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்
பயணத்தடை அமுலில் உள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன.
பெரியகல்லாறு மூன்றாம் இரண்டாம் வட்டார பிரிவுகளின் பல பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினமும், நேற்றும் குறித்த பகுதியில் 43கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது கோவிட் தொற்று உறுதியானவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பானவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பயணத்தடையினை அரசாங்கம் அறிவித்துள்ளபோதிலும் அதனை மீறும் வகையில் மக்கள் செயற்படுவதன் காரணமாகத் தொற்று அதிகரித்துச்செல்லும் நிலையுருவாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.


இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 19 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan