பாதாள குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய களுத்துறை பொலிஸார்
களுத்துறை தெற்கு முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி பாதாள உலக குழுவினருக்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி களுத்துறை தெற்கு பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினமே களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் கிடைபெற்ற தகவல்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
அதன்போது ஆயுதங்களுடன் பாதாள குழுவை சேர்ந்த 'ஜப்பனா' என்பவர் கைது செய்யப்பட்டார்.இவரிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைவிலங்கு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் வழங்கிய பொலிஸார்
பின்னர் அவர் களுத்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, இந்த துப்பாக்கிகள் எங்கு கிடைத்தது என கேட்டபோது ,ஆயுதங்கள் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி ருவன் விஜேசிங்க தான் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவரின் கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பொலிஸ் பொறுப்பதிகாரி 'ஜப்பனா'வுடன் இருந்தமை மற்றும் அவருடன் விருந்துகளில் கலந்து கொண்டமை, பொலிஸ் பொறுப்பதிகாரியின் துப்பாக்கியை 'ஜப்பனா' பாவித்த அனைத்தும் புகைப்படங்களும் இருந்துள்ளன.

இந்த பொலிஸ் அதிகாரி பாதாள குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த 'ஜப்பனா' களுத்துறை பொலிஸ் நிலையத்தில் பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் நிலைய அதிகாரியின் அறையில் விசாரணைகள் நடைபெறும் போது இவரும் விசாரணைகள் நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam